Monday, January 10, 2011

மங்காத்தாவில் விஜய்

தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்லை என்றால் இந்த போட்டோக்களை பாருங்கள் 

தலைக்கு வாட்ச் மாட்டி விடும் தளபதி 



தல இயக்குனருடன் தளபதி



எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டமா?
 
 

தல தளபதிக்கும் நடுவில் வெள்ளைகொடி



சமீபத்தில் மங்கத்தா ஷூட்டிங்கில் விஜய் கலந்து கொண்டார்... அந்த ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட படங்கள்தான் மேலே இருப்பவை ... இப்ப புரியுதா தலைப்புக்கு அர்த்தம்

Sunday, December 26, 2010

தல தலைதான்.......பாகம் 4

பூவெல்லாம் உன் வாசம் படம் வந்து பாட்டு ஹிட்... அந்த நேரத்துல தல மேல பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது அவர் ரசிகர்களிடையே ... அஜீத்தொட கேரியர் கிராஃப் டாப்புல இருந்த நேரம் அது .... தொட்டதெல்லாம் ஹிட்டு .... ஆனா பூவெல்லாம் உன் வாசம் படம் ஹிட்டா? இல்ல பிளப்பாண்ணு? இதுவரைக்கும் சரியா சொல்ல முடியல... சில பேர்  நல்லா இருக்குன்னு சொல்வான் சிலர் மொக்கைண்ணு சொல்வான் .. ஆனா கண்டிப்பா ரசிகர்களுக்கு அந்த படம் பாடலை தவிர்த்து ஏமாற்றம்தான் ... 


தல சும்மா காதல் பண்ணிக்கிட்டு டூயட் பாடிக்கிட்டு இருந்தது போதும் , அந்த மாதிரி பன்னதான் நெறைய பேர் இருக்காணுகளே , அடுத்து அஜித்த ஒரு மாஸ் ஹீரோவா பாக்கணும்னு ரசிகர்களெல்லாம் ஆசபட்டுகிட்டு இருந்த நேரம் அது ... அப்பதான் அதுக்கு ஏத்த மாதிரி அவர் ரசிகர்களுக்கு பெரிய சந்தோசத்தை கொடுக்கிற மாதிரி ஒரு நியூஸ் வந்தது ... அது சேது என்ற ஒரு மாஸ் பிளஸ் கிளாஸ் படம் கொடுத்த பாலாவின் அடுத்த படத்தில் தல நடிக்க போகிறார் என்பதுதான்  .. படத்தின் பெயர் நந்தா .... 


முகவரி ஷூட்டிங்கில் கொடைக்கானல் மலையில் தலையை தற்செயலாக சந்தித்த பாலா , அஜித்திடம் இந்த கதையை சொன்னதாகவும் தலையும் உங்களுடன் படம் பண்ண ஆசையாய் இருப்பதாக சொன்னதாக எல்லா பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்தது ... அடுத்த வாரமே படத்தோட அதிகாரபூர்வமான அறிவிப்பு .. பாலாவின் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் நந்தா ... படத்தை தயாரிக்க போவது தில் படத்தை தயாரித்த லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் ... இதை எல்லாம் விடவும் மிக பெரிய விஷயம் இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து தமிழ் சினிமாவின் பிதாமகன்  சிவாஜி கணேசன்  அவர்களும் நடிக்க போகிறார் என்பதுதான் ...

 

ஆமாம் ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் முதலில் பாலா நடிக்க கேட்டது செவாளியே சிவாஜி கணேசன் அவர்களைத்தான் ... நான் தினதந்தியில் இந்த நியூஸ் படித்தது இன்னமும் நன்றாக ஞாபகம் இருக்கிறது .. அதை படித்த அந்த நாள் முழுவதும் பார்க்கும் அனைவரிடமும் இதை பற்றி சொல்லி கொண்டே இருந்ததும் அதைவிட அதிகமாக  ஞாபகம் இருக்கிறது ... குறிப்பாக விஜய் ரசிகன் யாராவது கண்ணில்பட்டால்  அவ்வளவுதான் இதை ஓவர் பில்ட் அப்புடன் சொல்லி அவர்கள் வயித்தெரிச்சலை பார்த்து சந்தோசபடுவதுதான் எனக்கு அப்போதைய பெரிய பொழுதுபோக்கே ...  


படபிடிப்பும்  ஆரம்பித்தது ராமேஸ்வரத்தில்... நானும் எங்கள் ஊரில் நான் உருவாக்கிய தல ரசிகர்களும் எப்படியாவது ராமேஸ்வரம் சென்று சூட்டிங் பார்த்து விட வேண்டும் என்று பெரிய திட்டமெல்லாம் போட்டு வைத்திருந்தோம் .. அப்பொழுது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தேன் ... என் நண்பர்கள் அனைவரும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்... அனைவரும் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்து ராமேஸ்வரம் சென்று தங்கி சூட்டிங் பார்த்து ..தலையை சந்தித்து பேச வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தோம் ... ராமேஸ்வரம் எங்கள் ஊருக்கு மிக அருகில்தான் என்பதால் சென்று வருவதில் எங்களுக்கு பிரசனையே கிடையாது... காசு இல்லை என்றாள் நடந்தே சென்று வருவது என்று கூட முடிவு செய்து வைத்திருந்தோம்( அப்ப நாங்க ரொம்ப சின்ன பசங்க பாஸ்).... 


ஆனால் எங்கள் ஆசையில் பேரிடியாய் இறங்கியது ஒரு செய்தி .. படப்பிடிப்பில் பாலாவிர்க்கும் அஜித்திர்க்கும் சண்டை,படம் கைவிடப்பட்டது என்று, முதலில் இது வழக்கம் போல கிளப்பிவிடபடும் வதந்தி  என்றுதான் அஜித் ரசிகர்கள் அனைவரும் நம்பினார்கள்... ஆனால் அடுத்த வாரமே செய்தி கண்பார்ம் ஆனது .நந்தா படத்தில் இருந்து அஜித் விலகல் என்று .. மேலும் படத்தில் அஜித் இல்லை என்றதும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் படத்தில் இருந்து விலகி கொண்டனர் ... சிவாஜி கணேசன் அவர்களும் உடல் நல குறைவினால் படத்தில் நடிக்க முடியாமல் போனது ...   நாங்கள் படமே கைவிடப்பட்டது என்றுதான் நினைத்திருந்தோம் ... 


ஆனால் அதர்க்கு நேர்மாறாக பாலா அஜித் இல்லை என்றாலும் இந்த படம் தொடரும் ... படத்தை எடுத்து காட்டுவேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்து கொண்டிருந்தார் ... சொல்லியதை போலவே சூர்யாவை வைத்து ஷூட்டிங்கை தொடந்து நடத்தவும் செய்தார்... எங்களுக்கு அதெல்லாம் பெரிய விஷயமாக படவில்லை ... நாங்கள் ஓவெராக பில்ட் அப் கொடுத்ததில் செம கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்கள் இந்த நியூஸ் வந்த பிறகு , யாருனே தெரியாத சூரியாவெல்லாம் உங்க தலைக்கு பதிலா நடிக்க போரானா? அப்புறம் என்னடா தல , மட்ட  மயிருன்னூட்டு? என்று பதிலுக்கு எங்களை பழி வாங்கி கொண்டு இருந்தனர் ...எங்களுக்கெல்லாம் பயங்கர கடுப்பு... தல உடனே ஒரு படத்தில் நடித்து அதை நந்தாவுடன் ரிலீஸ் செய்து படத்தை பெரிய ஹிட் ஆக்கி பாலாவிற்க்கு  நோஸ் கட் கொடுக்க வேண்டும் என்று தல ரசிகர்கள் எல்லாரும் நினைத்தோம் .. 


சரியாக அந்த நேரத்தில் தல தனது அடுத்த படத்தை பற்றிய செய்தியை வெளியிட்டார்... அது ரெட்... படத்தின் பூஜை விளம்பரம் பேப்பரில் வந்தது .. தல மொட்டை கெட்டப்பில், நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டு சிவப்பு கலர் சட்டையில் இருப்பார்... அதை பார்த்த அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் பயங்கர கொண்டாட்டம் ... இந்த படம் கண்டிப்பாக நந்தாவிர்க்கு பதில் சொல்லும் என்று நம்பினோம் காரணம் நந்தாவிலும் தலைக்கு மொட்டை கெட்டப்புதான் என்று பாலா சொல்லி இருந்தார் (ஆனால் ஸ்டில் எதுவும் வரவில்லை அப்பொழுது ) ... இந்த கெட்டப் விஷயம் தல மறைமுகமாக இது நந்தாவிற்க்கு பதிலடி என்று சொல்லியதை போல நாங்கள் உணர்ந்தோம் ... 



அந்த விளம்பரம் பேப்பரில் வந்ததில் இருந்து தல ரசிகர்கள் பல பேர் ஊருக்குள் அதே கெட்டப்புடன் சுற்ற ஆரம்பித்து விட்டனர் ... படத்தின் கதை பற்றி அரசால் புரசலாக வந்த விசயங்களை வைத்து இந்த படம் தலைக்கு இன்னொரு தீனாவாக கண்டிப்பாக அமையும்  என்று நாங்கள் பயங்கர குஷியில் இருந்தோம் ... படமும் வந்தது ... 


எங்கள் ஊர் மகாராணி திரை  அரங்கில் முதல் நாள் முதல் காட்சி... கண்டிப்பாக ரஜினி படத்தை தவிர வேறு எந்த படத்திர்க்கும் அப்படி ஒரு ஓபெனிங்க் இருந்திருக்காது ... நான் இதுவரைக்கும் அப்படி ஒரு கூட்டம் திரை அரங்கில் பார்த்ததில்லை ... எந்த நடிகனாலும் அப்படி ஒரு ஓபெனிங்க் இனிமேல் காட்டவே முடியாது ... அது தலையோட மாஸின் உச்சம்... அரங்கம் எல்லாம் தல ரசிகர்கள் ... இந்த படம் வந்த பின்னால்தான் தல king of opening என்று மாற்று கருத்தே இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளபட்டார்... எங்கள் ஊரில் படையப்பாவிர்க்கு பின்னால் அம்பது ரூபாவிற்க்கு டிக்கெட் விற்க்கபட்டது ரெட் படத்திர்க்குதான்... நான் முன்பே சொல்லியதை போல தலையோட கேரியர் கிராஃப்  டாப்பில் இருந்த நேரம் அது .... {அதை அப்படியே சரியாக கொண்டு போயி இருந்தால் போட்டிக்கு யாருமே இல்லாமல்(யாராலும் போட்டி போட்டு இருக்கவும் முடியாது )  தல யாராலும் தொட முடியாத உச்சத்தில் இருந்திருப்பார் ...}

படமும் ஆரம்பித்தது ...     

Wednesday, December 22, 2010

எல்லாமே மாறும் - அஜித்

நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தின் பேட்டி குமுதத்தில் ... அவரின் அரசியல் ஆசையை பற்றி , பில்லா 2 வை பற்றி , சராசரி இந்திய குடிமகனாக அவர் ஆசைபடும் இந்தியாவின் எதிர்காலம் பற்றி என்று எல்லா விசயங்களை பற்றியும் வழக்கம் போல தல ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாய் பேசி இருக்கிறார் ... குறிப்பாக இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பற்றிய அவரின் பார்வை , மக்கள் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை அவர் இன்னமும் நிறைய mature ஆகி இருக்கிறார் என்ப்தை காட்டுகிறது ... அவர் ரசிகர்களுக்கு அவர் பில்லா 2 ஆம் பாகத்தை பற்றி சொல்லி இருக்கும் செய்தி வறண்ட பாலைவனத்தில் திரண்டு  நிற்கும் கருமேகங்களை போல மிக பெரிய சந்தோசத்தை கொடுக்கும் ...  இதோ அவரின் பேட்டி ...

(படம் தெரியாதவர்கள் அதை வழக்கம் போல் கிளிக்கி பெரியதாக்கி பார்க்கவும்)











                                           photos thanks to http://www.ajithfans.com/

சிவப்பதிகாரம் என்று ஒரு படம் அதில் இறுதி காட்சியில் ஒரு வசனம் ஒன்று வரும் ... "ஒருத்தன் எம்எல்ஏ ஆகணும்னா அவன் ஐந்து வருடம் கவுன்சிலரா வேலை செய்திருக்க வேண்டும் .. எம்பி ஆகணும்னா ஐந்து வருடம் எம்எல்ஏவா இருந்திருக்கணும் ... மந்திரி ஆகணும்னா ஐந்து வருடம் எம்பிஆ இருந்திருக்கணும் ..." அந்த படம் பார்த்த பொழுது என்னை அதிகம் யோசிக்க வைத்த ஒரு வசனம் இது .. இன்று அதே வசனத்தை நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு தல பதிலாக கொடுத்துள்ளார் .. இப்படி ஒரு வெளிப்படையான போல்டான பதிலை இதுவரை எந்த நடிகரும் கொடுத்ததில்லை...  தான் நடிக்கும் படத்திற்க்கு மாங்காத்தா என்று பெயர் வைத்திருக்கும் அஜித் , இந்த கேள்விக்கு மற்றவர்கள் போல உள்ளே வெளியே ஆட்டம் ஆடாமல் மனதில் பட்டதை சொல்லி இருக்கிறார் ... அது யதார்த்ததிர்க்கு முரணானது என்றாலும் இன்று நாம் நாட்டிர்க்கு தேவையானது ...