Wednesday, December 22, 2010

எல்லாமே மாறும் - அஜித்

நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தின் பேட்டி குமுதத்தில் ... அவரின் அரசியல் ஆசையை பற்றி , பில்லா 2 வை பற்றி , சராசரி இந்திய குடிமகனாக அவர் ஆசைபடும் இந்தியாவின் எதிர்காலம் பற்றி என்று எல்லா விசயங்களை பற்றியும் வழக்கம் போல தல ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாய் பேசி இருக்கிறார் ... குறிப்பாக இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பற்றிய அவரின் பார்வை , மக்கள் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை அவர் இன்னமும் நிறைய mature ஆகி இருக்கிறார் என்ப்தை காட்டுகிறது ... அவர் ரசிகர்களுக்கு அவர் பில்லா 2 ஆம் பாகத்தை பற்றி சொல்லி இருக்கும் செய்தி வறண்ட பாலைவனத்தில் திரண்டு  நிற்கும் கருமேகங்களை போல மிக பெரிய சந்தோசத்தை கொடுக்கும் ...  இதோ அவரின் பேட்டி ...

(படம் தெரியாதவர்கள் அதை வழக்கம் போல் கிளிக்கி பெரியதாக்கி பார்க்கவும்)











                                           photos thanks to http://www.ajithfans.com/

சிவப்பதிகாரம் என்று ஒரு படம் அதில் இறுதி காட்சியில் ஒரு வசனம் ஒன்று வரும் ... "ஒருத்தன் எம்எல்ஏ ஆகணும்னா அவன் ஐந்து வருடம் கவுன்சிலரா வேலை செய்திருக்க வேண்டும் .. எம்பி ஆகணும்னா ஐந்து வருடம் எம்எல்ஏவா இருந்திருக்கணும் ... மந்திரி ஆகணும்னா ஐந்து வருடம் எம்பிஆ இருந்திருக்கணும் ..." அந்த படம் பார்த்த பொழுது என்னை அதிகம் யோசிக்க வைத்த ஒரு வசனம் இது .. இன்று அதே வசனத்தை நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு தல பதிலாக கொடுத்துள்ளார் .. இப்படி ஒரு வெளிப்படையான போல்டான பதிலை இதுவரை எந்த நடிகரும் கொடுத்ததில்லை...  தான் நடிக்கும் படத்திற்க்கு மாங்காத்தா என்று பெயர் வைத்திருக்கும் அஜித் , இந்த கேள்விக்கு மற்றவர்கள் போல உள்ளே வெளியே ஆட்டம் ஆடாமல் மனதில் பட்டதை சொல்லி இருக்கிறார் ... அது யதார்த்ததிர்க்கு முரணானது என்றாலும் இன்று நாம் நாட்டிர்க்கு தேவையானது ...


2 comments:

  1. ஸாரி பிரதர், நான் தலயோட கருத்தில் இருந்து மாறுபடுகிறேன். ஏன்னா அவர் நாடகத்தில் நடித்துவிட்டோ அல்லது தெருக்கூத்தில் நடித்துவிட்டோ சினிமாவுக்கு வரவில்லை. அரசியலில் ஈடுபட முன் அனுபவம் தேவையில்லை என்பதே என் கருத்து. அதற்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மன சுத்தமான எண்ணமே போதும் என நினைக்கிறேன். தல இத ஒத்துக்குவார் என நினைக்கிறேன். ஏன்னா மற்ற சாதாரண மனிதன் அரசியலில் நுழைந்து மக்களுக்கு சேவை செய்ய எண்ணினால் அவருக்கு அறிமுகம் தேவை. அவர்தான் கீழ்மட்டத்திலிருந்து படிப்படியாக வரவேண்டும். ஆனால் மக்கள் மனதில் ஏற்கனவே இடம் பிடித்துவிட்ட தல மாதிரி ஆட்கள் அப்படி வரவேண்டிய அவசியம் இல்லை. இது அவர் மக்களுக்கு செய்ய எண்ணியிருந்த நல்ல திட்டங்களை தள்ளிப்போடுமே அன்றி வேறில்லை. இது என் கருத்து

    ReplyDelete
  2. @ Arman Sharaf

    நீங்கள் சொல்வதில் உண்மை இருந்தாலும் அடிமட்டதில் இருந்து வரும் பொழுது பல விசயங்களை கற்று தெளிந்து வரலாம் ,, மேலும் யார் மனதையும் புண்படுத்த தேவை இருக்காது ... இதுதான் தல சொல்ல வந்தது என்று நினைக்கிறேன் ...

    ReplyDelete